தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி போட வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

சென்னை கார்ப்பரேஷன் கிளினிக்குகளில் நீண்ட நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் கிளினிக்குகள் சுத்தமாக இருந்தாலும் இரு சில நாட்களில் சுமார் முப்பது நாற்பது நபர்கள் நெருக்கமாக வரிசையில் நிற்கின்றனர். சுகாதார ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்தினாலும் யாரும் பொருட்படுத்துவதில்லை. இதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் சில தனியார் கிளினிக்குகளிலும் மற்றும் கல்யாண மண்டபங்களிலும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு உட்கார வைக்கப்பட்டு பின்னர் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Verified by ExactMetrics