பழங்கள் மற்றும் காய்கறிகளை தெருக்களில் வேன்கள் மூலம் விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை சீரடைந்தது.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை மூலமாகவும் தனியார் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்களை தெருக்களில் விற்பது சம்பந்தமாக மக்களிடையே குழப்பங்கள் நிலவி வந்தது. நேரத்தில் இடங்களில் வண்டிகள் வரவில்லை என்ற புகார்களும் வந்தது. இந்நிலையில் இன்று தெருக்களில் ஆங்காங்கே வண்டிகளில் காய்கறிகள் விற்பதை பார்க்க முடிந்தது. மக்கள் காய்கறிகள் வாங்கி சென்றனர். இந்த நடைமுறை மக்களுக்கு எளிமையாக இருந்தாலும் காய்கறி விற்பனை செய்யும் வண்டிகள் எப்போது வரும் எங்கெல்லாம் நிற்கும் என்ற விவரங்கள் தெரியவில்லை.

Verified by ExactMetrics