புதிய வசதியுடன் கூடிய மயிலாப்பூர் மயானம் மே 31 க்குப் பிறகு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மயிலாப்பூர் மின் மயானம் மூன்று நான்கு வாரங்களாக அங்குள்ள உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது பழுதடைந்த உபகரணத்தை மாற்ற கோயம்புத்தூரிலுள்ள ஒரு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உபகரணங்களை கொண்டு வந்து பொருத்த இன்னும் 5/6 நாட்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மயிலாப்பூர் மின் மயானம் மே 31ம் தேதிக்கு பிறகே முழுமையாக செயல்படத் தொடங்கும். தற்போது ஏற்படுத்தப்படவுள்ள புதிய முறையில் உடல்கள் திரவ எரிவாயு மூலம் எரிக்கப்படவுள்ளது. இந்த மின் மயானத்திற்கு வழக்கமான நாட்களில் தினமும் ஐந்து முதல் ஆறு உடல்கள் வரும். ஆனால் இப்போது கொரோனா என்பதால் அதிகமான உடல்கள் வருகிறது. எனவே இதன் தேவை அதிகமாக உள்ளது. மின் மயான மேடை பழுதடைந்துள்ளதால், தற்போது இங்கு வரும் உடல்கள் புதைக்கப்படுகிறது.

Verified by ExactMetrics