பழங்கள் மற்றும் காய்கறிகளை தெருக்களில் வேன்கள் மூலம் விற்பனை செய்ய தோட்டக்கலை துறை ஏற்பாடு.

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை வேன்கள் மூலம் அனைத்து தெருக்களிலும் விற்பனை செய்யப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு தெருக்களுக்கு வரும் வாகனங்களில் தமிழக அரசின் சார்பாக பேனர்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மக்கள் சிலர் காய்கறிகளை வாங்கி இருப்பு வைக்காமல் இருந்தனர். ஆனால் இன்று ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த அரசின் காய்கறி விற்பனை வாகனம் வந்ததாக தெரிவித்தனர். அரசு கொடுத்திருந்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் யாரும் அழைப்பை ஏற்பதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.