பக்தர்களை தினமும் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டி கபாலீஸ்வரர் கோவில் அதிகாரியிடம் மனு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கோவில் அதிகாரியிடம் வாரத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை கோவில் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.

இதற்குமுன் செவ்வாய்க்கிழமை மட்டும் பக்தர்களை சன்னதிக்குள் அனுமதித்தனர். இந்நிலையில் தற்போது இந்த மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்களை தினமும் சன்னதிக்குள் அனுமதிப்பதாகவும் அதே போன்று இங்கும் அனைத்து நாட்களிலும் அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Verified by ExactMetrics