கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடக்கம்

கபாலீஸ்வரர் கோவிலில் சுமார் பதினெட்டு மாதங்களுக்கு பிறகு இன்று அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கோவில்களிலும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கியது. சுமார் பன்னிரெண்டு மணியளவில் குறிப்பிட்ட அளவு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு முழு சாப்பாடு இலை போட்டு பொரியல் சாம்பார் கூட்டுடன் வழங்கப்படுகிறது.

இந்த நடைமுறை இனிமேல் தினமும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ளதால் குறிப்பிட்ட இந்த நாட்களில் சாப்பாடு பார்சல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.