நொச்சிக்குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் இன்று காலை தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் சேர்ந்து வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளனர்.

மூன்று குழுக்களாக பிரிந்து நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று முதல் மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த தடுப்பூசி போடும் பணி தினமும் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.