மயிலாப்பூரில் கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் பங்கேற்பு.

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ஞாயிற்றுகிழமை மதியம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திறந்த வாகனத்தில் வெங்கடேச அக்ரஹார தெருவில் அதிமுக வேட்பாளர் ஆர். நடராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அதே நேரத்தில் ஆழ்வார்பேட்டையில் திறந்த வாகனத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர் த.வேலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பின்பு வேட்பாளர்கள் மாலையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். மாலை ஏழு மணியளவில் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர்.