மாங்கொல்லையில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம்.

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியின் ஒரு முனையில் உள்ள மாங்கொல்லையில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. போலீசாரும் குறைவான அளவே பணியில் இருந்தனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் சாமி ஊர்வலம் ஒன்று வேறொரு பாதையில் திருப்பிவிடப்பட்டது.