இந்த காலனி தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டது.

மயிலாப்பூர் பகுதிகளில் தற்போது பெரும்பலான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர். அந்த வகையில் டாக்டர் ஆர்.கே. சாலை அருகே உள்ள ராஜசேகரன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் அங்கு வசிக்கும் அனைத்து மூத்த குடிமக்களும் தடுப்பூசி எடுக்க வேண்டும் என்று ஒரு திட்டம் வகுத்து ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடி அவர்கள் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த காலனி சி.எஸ்.ஐ கல்யாணி மருத்துவமனை எதிரே உள்ளது.

 

Verified by ExactMetrics