தேர்தல் 2021: அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் இன்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுது வேட்புமனுவை பசுமை வழி சாலையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். இதில் அதிமுகவின் R. நடராஜ், திமுகவின் த.வேலு மக்கள் நீதி மய்யத்தின் நடிகை ஸ்ரீபிரியா, அமமுகாவை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இது தவிர சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.