தமிழக அரசு தற்போது இந்து கோவில்களின் சொத்துக்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களை கடந்த சில வாரங்களில் ஆய்வு செய்தார். பின்னர் நடைபெற்ற அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் கபாலீஸ்வரர் கோவிலின் தெற்கு பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் திருமண மண்டபங்கள், மல்டி லெவல் கார் பார்க்கிங், கோவில் ஊழியர்களுக்கு வீடுகள் கட்டுவது போன்ற ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற கட்டிடங்கள் கட்டுவது வரவேற்க கூடிய ஒன்றாக இருந்தாலும் இதை வேறொரு இடத்தில் கட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இது போன்ற கட்டிடங்கள் கட்டும் போது கோவிலை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் மேலும் இங்கு பழமையான பாரம்பரியமான ஒட்டு வீடுகள் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே அமைச்சரும் மற்ற அதிகாரிகளும் இது சம்பந்தமான பணிகளை தொடங்குவதற்கு முன் மக்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…