பூங்காவில் மைக்லெஸ் கச்சேரி ஏப்ரல் 3 முதல் மீண்டும் தொடக்கம்.

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நேரடி இசை கச்சேரி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

கொரோனா சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தாரின் நாகேஸ்வரராவ் பூங்காவில் மாதாந்திர ‘மைக்லெஸ்’ கச்சேரிகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

நாகேஸ்வர ராவ் பூங்காவில் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரை அடையாறில் உள்ள இந்து சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவரான விஸ்வநாதனின் ஒரு மணி நேர புல்லாங்குழல் இசை கச்சேரி நடைபெறவுள்ளது.

Verified by ExactMetrics