கபாலீஸ்வரர் கோவிலில் எல்.இ.டி வீடியோ திரை நிறுவப்பட்டது.

கபாலீஸ்வரர் கோவிலில் தற்போது புதிதாக எல்.இ.டி திரை நவராத்திரி மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கோவிலில் செய்து தரப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது எல்.இ.டி திரை கபாலீஸ்வரர் கோவிலில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரதோஷம் மற்றும் இதர நிகழ்ச்சிகளையும் நவராத்திரி மண்டபத்தில் உள்ள இந்த திரையில் காணலாம்.