ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரையை பொதுமக்கள் பயன்படுத்த மீண்டும் தடை

மெரினா கடற்கரையை ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் பயன்படுத்த மீண்டும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வந்ததாலும் அதே நேரத்தில் கடலை ஒட்டிய பகுதியில் மக்கள் முகக்கவசம் அணியாமலும் மற்றும் நெருக்கமாக நின்றிருந்ததால் கொரோனா வைரஸ் பரவும் என்பதை கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மக்கள் மெரினா கடற்கரைக்கு வந்து செல்லலாம்.