நாற்பது வருடங்களுக்கு மேலாக ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு சீருடைகள் தைத்து வரும் பழம்பெரும் தையல்காரர்

சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பிரபலம் வாய்ந்த ‘ஈராஸ் டைலர்’ கடையை நடத்தி வந்த மொய்தீன் பாய் பள்ளி சீருடைகளை தைத்து கொடுத்து வந்துள்ளார். பள்ளி சீருடைகள் தவிர்த்து இவர் பெண்களுக்கான ஜாக்கெட்டுகள் மற்றும் இதர துணிகள் தைப்பதில் பிரபலம்.

இவருக்கு தற்போது எண்பது வயதாகிறது. எனவே அவர் தன்னுடைய தொழிலை நிறுத்த முடிவு செய்துள்ளார். வரும் நவம்பர் 1 அன்று பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் இவர் ஏற்கனெவே மாணவிகளுக்கு தைத்து வைத்திருந்த சீருடைகளை விற்பனை செய்யவுள்ளார். இவருக்கு தற்போது கடை கிடையாது. எனவே நீங்கள் உங்கள் ரோசரி மெட்ரிக் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு சீருடைகள் வாங்க விரும்பினால், லஸ்ஸில் உள்ள மோகன் ஜுவல்லரி, கனி டிரெசஸ் கடைகள் இருக்கும் வளாகத்தின் அடித்தளத்தில் இருக்கும் டைலரை அணுகவும். இவர் மொய்தீன் பாயிடம் சென்று உங்களுக்கான சீருடைகளை வாங்க உதவுவார்.