குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கும் மந்தைவெளி தபால் நிலையம்

மந்தைவெளி தபால் நிலையம் இப்போது குறைந்தளவு ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. ஊழியர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். சிலரது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதால் குறைந்தளவே ஊழியர்கள் அலுவலகத்தில் பணி செய்கின்றனர். எனவே பதிவு தபால் மற்றும் விரைவு தபால் சேவைகளை பெற விரும்புபவர்கள் மதியம் இரண்டு மணிக்குள் கொண்டுவந்து பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.