எழுபது விழுக்காடு முடிக்கப்பட்ட கல்வி வாரு தெரு விரிவாக்கம் பணிகள்

முண்டகக்ண்ணி அம்மன் எம்.ஆர்.டிஎஸ். அருகே உள்ள போக்குவரத்து நெரிசல் மிக்க கல்வி வாரு தெருவில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த சாலை விரிவாக்கம் பணிகள் தற்போது எழுபது விழுக்காடு நிறைவடைந்துள்ளது. இந்த சாலையில் கால்வாய் ஓரமாக தடுப்பு சுவரும், சாலையில் ஓரிடத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சி கூடமும் அமைத்துள்ளனர். மேலும் குழந்தைகள் விளையாட பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. கச்சேரி சாலைக்கு அருகே சிறிய அளவிலான ஒரு பூங்காவும் அமையவுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் இந்த சாலை விரிவாக்கம் பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.