தேர்தல் 2021: மார்ச் 7ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இன்று ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக இன்று காலை அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசனை கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் மாதம் 7ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்று மய்யத்தில் சேர்ந்து பணியாற்றிவரும் திரு.சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ் அவர்கள் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் அல்லாதோர் கூட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Verified by ExactMetrics