ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் குரங்குகள் தொல்லை

கடந்த ஒரு வாரமாக அழ்வார்பேட்டை, சி.பி. இராமசாமி சாலை மற்றும் அபிராமபுரம் பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்திருக்கிறது. இது சம்பந்தமாக பொதுமக்கள் வேளச்சேரியில் உள்ள மாவட்ட வன சரக அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளனர். மாவட்ட வனச்சரக அலுவலர்கள் இது போன்று சுமார் பன்னிரண்டு புகார்கள் வந்துள்ளதாகவும் குரங்குகளை பிடிக்க சில நாட்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். இங்கு செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டத்திற்கும் சேர்த்து சிரிய அளவிலான ஊழியர்களே பணியில் இருப்பதால் இது போன்று கால அளவு தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் உங்கள் பகுதிகளில் இது போன்று குரங்கு மற்றும் பாம்பு தொல்லைகள் இருப்பின் இவர்களை தொடர்பு கொள்ள அலுவலக தொலைபேசி எண்: 22200335 /கைபேசி எண் : 9566184292