மயிலாப்பூர் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை எப்போது?

மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மாணவர் சேர்க்கை டிசம்பர் மாதத்தில் நடைபெறும், ஆனால் கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள சிவசாமி சீனியர் செகண்டரி பள்ளியில் சில வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளனர். (இந்த பள்ளி ஏற்கனெவே மந்தைவெளியில் செயல்பட்டு வந்தது). மேலும் சேர்க்கை சம்பந்தமான தகவல்களை பள்ளியின் வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதுபோன்று மந்தைவெளியில் உள்ள செயின்ட். ஜான்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியிலும் மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளனர். இது போன்று மாணவர் சேர்க்கை சம்பந்தமான தகவல்களை மயிலாப்பூர் டைம்ஸில் நாம் வெளியிடவுள்ளோம்.