ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் தொல்லை ஏற்படுத்தி வந்த குரங்குகள் பிடிபட்டது.

ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொல்லை ஏற்படுத்தி வந்த குரங்குகள் வனத்துறையினரால் இரன்டு நாட்களுக்கு முன் பிடிக்கப்பட்டது. மூன்று குரங்குகள் பிடிபட்ட நிலையில் மீதமுள்ள இரு குரங்குகள் தப்பியோடிவிட்டது. இது போன்று உங்கள் பகுதியில் குரங்குகள் தொல்லை இருந்தால் வேளச்சேரியிலுள்ள வனத்துறையை தொடர்புகொள்ளலாம். தொலைபேசி எண்: 22200335. இங்கு குறைந்த அளவே பணியாளர்கள் பணியில் இருப்பதால் உங்களுடைய புகார்களை அவர்கள் சரி செய்ய சில நாட்கள் தேவைப்படும்.

Verified by ExactMetrics