கடந்த வருடம் (2020ம் ஆண்டு) ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் ரத்து செய்யப்பட்ட பங்குனி திருவிழா பிப்ரவரி 28 முதல் தொடக்கம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழா 2020 ஆம் ஆண்டு பங்குனியில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ரத்து செய்யப்பட்டது.

இப்போது இந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ரத்து செய்யப்பட்ட பங்குனி திருவிழா நடைபெறவுள்ளது. விழாவின் விவரங்கள் உங்களது பார்வைக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி அட்டவணை:

மார்ச் 1: கொடியேற்றம் (காலை)
மார்ச் 5 : சந்திரசேகரர் ரிஷப வாகனம் (மாலை)
மார்ச் 6 : 108 சங்காபிஷேகம்
மார்ச் 7 : சிறிய திருத்தேர்
மார்ச் 8 : நான்கு நாயன்மார்கள் ஊர்வலம், பூம்பாவாய் (காலை). சந்திரசேகரர் பாரிவேட்டை, குதிரை வாகனம் (மாலை)
மார்ச் 9 : பிட்சாடனர் உற்சவம் (மாலை)
மார்ச் 10: தீர்த்தவாரி (காலை), திருக்கல்யாணம் மற்றும் கொடியிறக்கம் (மாலை)

குறிப்பு : அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும். நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

Verified by ExactMetrics