தேர்தல் 2021: மயிலாப்பூரில் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி இருக்கும்போது, ​​வாக்குச்சாவடிகளில் மட்டும் மதியம் வரை மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது

பகல் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தனர். மயிலாப்பூரில் பொது இடங்கள் எப்படி இருந்தது?

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது, சுமார் 11: 30 மணியளவில் ஒரு சில நபர்களே இருந்தனர். ஆனால் ஏற்கனெவே அறிவிக்கப்பட்ட 1008 சங்கு அபிஷேகம் கோவிலின் ஒரு பகுதியில் நடந்துக்கொண்டிருந்தது. இதில் மிகவும் குறைந்த அளவு மக்களே பங்கேற்றிருந்தனர்.

கோவிலுக்கு வெளியே தெற்கு மாடவீதியும் வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு ஒரு சில வணிகர்களே கடைகளை திறந்து வைத்திருந்தனர்.

எம்டிசி பஸ் நிறுத்தங்களில் சிலர் அமர்ந்திருப்பதைக் பார்த்தாலும், லஸ் சந்திபில் வழக்கமாக செல்லும் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது..

மந்தைவெளியில் உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியில் இருந்த சில ஊழியர்களைத் தவிர்த்து மற்றபடி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோன்று பகல் நேரத்தில் சாந்தோம், பட்டினபாக்கம் மற்றும் டாக்டர் ஆர். கே.சாலை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால் மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

Verified by ExactMetrics