மயிலாப்பூர்வாசிகளின் வாக்குப்பதிவு குறிப்புகள்; உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

வெண்ணிலா டி.என்
குமாரராஜா பள்ளியில் வாக்களிக்க அதிக அளவிலான மூத்த குடிமக்கள் வந்திருந்தனர். இதுவரை இவ்வளவு மூத்தகுடிமக்களை வாக்களிக்கும் இடத்தில் பார்த்ததில்லை.

அஸ்வின் ஹரி
சில குழப்பங்களுக்குப் பிறகு மந்தைவெளியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 7:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அடையாள அட்டை ஆதாரம் இல்லாமல் வாக்களிக்க வந்த சில மூத்த குடிமக்கள் இருந்தனர். பூத் சீட்டுகள் தேவையில்லை என்ற செய்தியை தவறாக புரிந்து கொண்டு அடையாள அட்டை எடுக்காமல் வந்திருந்தனர்.

ஆதி வரகன்
(செயின்ட் அந்தோனி பள்ளியில்) ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி கவுண்டர்கள் இருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகே ஆண்களுக்கான ஓட்டு போடும் இயந்திரம் வேலை செய்யத் தொடங்கியது, ஆனால் பெண்களுக்கான ஓட்டுபோடும் இயந்திரம் நீண்ட நேரமாகியும் இயங்கவில்லை. என் அம்மா வாக்களிக்க நீண்ட நேரம் பிடித்தது.

பிரசன்னா ராமசாமி
நான் சரியாக காலை 7 மணிக்கு ராஜா முத்தையா பள்ளிக்கு வாக்களிக்க சென்றேன். 7.20 மணி வரை அவர்கள் ஏதோ தடுமாறிக் கொண்டிருந்தார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னரே வாக்குப்பதிவை தொடங்கினர்.

(மயிலாப்பூர் டைம்ஸ் வாக்குப்பதிவு சம்பந்தமான உங்களது கருத்துக்களை இங்கே வெளியிடுவோம். நீங்களும் வாக்குப்பதிவு சம்பந்தமான கருத்துக்களை அனுப்பலாம்.)

Verified by ExactMetrics