பகல் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தனர். மயிலாப்பூரில் பொது இடங்கள் எப்படி இருந்தது?
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது, சுமார் 11: 30 மணியளவில் ஒரு சில நபர்களே இருந்தனர். ஆனால் ஏற்கனெவே அறிவிக்கப்பட்ட 1008 சங்கு அபிஷேகம் கோவிலின் ஒரு பகுதியில் நடந்துக்கொண்டிருந்தது. இதில் மிகவும் குறைந்த அளவு மக்களே பங்கேற்றிருந்தனர்.
கோவிலுக்கு வெளியே தெற்கு மாடவீதியும் வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு ஒரு சில வணிகர்களே கடைகளை திறந்து வைத்திருந்தனர்.
எம்டிசி பஸ் நிறுத்தங்களில் சிலர் அமர்ந்திருப்பதைக் பார்த்தாலும், லஸ் சந்திபில் வழக்கமாக செல்லும் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது..
மந்தைவெளியில் உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியில் இருந்த சில ஊழியர்களைத் தவிர்த்து மற்றபடி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோன்று பகல் நேரத்தில் சாந்தோம், பட்டினபாக்கம் மற்றும் டாக்டர் ஆர். கே.சாலை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆனால் மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…