மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலகம் முறையாக ஆழ்வார்பேட்டையில் திறக்கப்பட்டது.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவின் அலுவலகம் இந்த வாரம் ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் அருகே திறக்கப்பட்டது. இந்த அலுவலக திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும், பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனும் கலந்து கொண்டனர். இந்த புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தில் இன்னும் கொஞ்ச வேலைகள் இருப்பதாகவும் மேலும் அந்த வேலைகள் முடிக்கப்பட்டு இந்த மாத இறுதியில் எம்.எல்.ஏ அலுவலகம் முழுஅளவில் செயல்பட தொடங்கும் என்று எம்.எல்.ஏ தா. வேலு கூறுகிறார். இதே இடத்தில்தான் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் அலுவலகமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.