கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை பாக்கி செலுத்தாதவர்களின் கடைகளை மூடும் பணி தொடக்கம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக மயிலாப்பூர் பகுதியில் பல்வேறு இடங்கள் உள்ளது. இதுபோன்று கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு இதுபோன்ற கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களை அகற்றவும் மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடை வைத்திருப்பவர்கள் குத்தகை எடுத்திருப்பவர்கள் அதற்கான வாடகை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்து செயல்பட்டு வருகிறது.

மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான லஸ் சர்ச் சாலை அருகே உள்ள இடத்தில் ஒருவர் நீண்ட மாதங்களாக வாடகை ஏதும் தராமல் உணவகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். நேற்று மாநகராட்சி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இது போன்று மற்ற இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு சீல் வைக்கும் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை பிரச்சனை சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமக்கள் சார்பாக வழக்குகள் ஏற்கனெவே தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலர், தாங்கள் ஐம்பது வருடங்களாக கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கடைகளை நடத்தி வருவதாகவும் சமீபத்தில் கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டதாகவும் கொரோனா காரணமாக வியாபாரம் சரிவர இல்லாததால் இந்த உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

Verified by ExactMetrics