பாரதிய வித்யா பவனில் ஓணம் கலாச்சார விழா. ஆகஸ்ட் 21 முதல்.

பாரதிய வித்யா பவன் அதன் மயிலாப்பூர் அரங்கில் ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஆகஸ்ட் 21 முதல் 25 வரை ஓணம் கலாச்சார விழாவை நடத்துகிறது, அனைவரும் வரலாம்.

ஆகஸ்ட் 21ம் தேதி மாலை 6 மணிக்கு, மேற்கு வங்க முன்னாள் கவர்னர், எம்.கே.நாராயணன் சிறப்பு விருந்தினராகவும், கலாக்ஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகவும், துவக்க விழா நடக்கிறது.

விழாவில் ஆகஸ்ட் 21ல் இரண்டு கதகளி நடனங்கள், ஆகஸ்ட் 22ல் செண்டமேளம், ஒப்பனை, ஓட்டம் துள்ளல் நிகழ்ச்சிகள், ஆகஸ்ட் 23ல் மோகினியாட்டம், நாட்டுப்புற பாடல்கள், ஆகஸ்ட் 24ல் கொடியாட்டம், மோகினியாட்டம், ஆகஸ்ட் 25ல் மலையாள நாடகம் நடக்கிறது.

நிகழ்ச்சிகளின் முழு அட்டவணை www.bhavanschennai.org இல் உள்ளது.

Verified by ExactMetrics