குடியரசு தினவிழாவையொட்டி மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்ற ஒத்திகை.

குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி அதற்கான ஒத்திகை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை இரண்டாவது ஒத்திகை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஒத்திகையில் சுமார் ஐந்து மாநிலத்தில் இருந்து வந்த நாட்டிய குழுவினரின் ஒத்திகை நடைபெற்றது. இது தவிர காவல்துறை, கப்பல் படை, இராணுவம் ஆகியோரின் ஒத்திகையும் நடைபெற்றது. கடைசி ஒத்திகை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவை சாலையின் ஒருபுறத்திலிருந்து பொதுமக்கள் காணலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.