டி.யு.சி.எஸ் கடைகளில் பட்டாசு விற்பனை

தமிழ்நாடு அரசின் டி.யு.சி.எஸ் கடைகளில் தற்போது தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு சிவகாசி ஸ்டாண்டர்டு கம்பெனியின் பட்டாசுகள் அனைத்தும் வெவ்வேறு ரகங்களிலும் மற்றும் குறைந்த விலையிலும் விற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மயிலாப்பூரில் டி.யு.சி.எஸ் கடை பில்ரோத் மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை முதல் விற்பனை காலை முதல் இரவு வரை நடைபெற்று வருகிறது. தீபாவளி அன்றும் இங்கு பட்டாசு விற்பனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.