ஆர்.ஏ புரத்தில் சங்கரநேத்ராலயாவின் புதிய கிளை தொடக்கம்

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் கிளை ஆர்.ஏ.புரத்திலுள்ள காமராஜர் சாலையில் இந்த வாரம் திறக்கப்பட்டது. மந்தைவெளியில் வெங்கடகிருஷ்ணா சாலையில் இயங்கி வந்த நவ சுஜா கண் மருத்துவமனை இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் இந்த புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநோயாளிகளுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. கண்புரை சம்பந்தமாகவும், இதர கண் சம்பந்தமான சாதாரண சிகிச்சைகள் அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு நோயின் தீவிரம் இருந்தால் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். மருத்துவமனை காலை 7.30 மணிமுதல் மாலை 4 மணி வரை இயங்கும். இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் முன்பதிவு செய்த பின்னரே வரவேண்டும். முன்பதிவு செய்ய தொலைபேசி எண்: 4908 3500

 

admin

Recent Posts

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

7 days ago

பணியின்போது உயிரிழந்த Urbaser ஊழியரின் குடும்பத்திற்கு மந்தைவெளிப்பாக்கம் சமூகம் நிதியுதவி

மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…

1 week ago

மந்தமாக நடைபெற்று வரும் நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள்

நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…

1 week ago

Tally-யின் அடிப்படைகள் குறித்த இலவசப் பயிற்சி. ஏழை இளைஞர்களுக்காக. இப்போதே முன் பதிவு செய்யுங்கள்.

1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் விடையாற்றி விழா ஏப்ரல் 3 முதல் தொடங்குகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…

2 weeks ago

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

2 weeks ago