முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி இன்றும் நாளையும் கடைகள் முழுநேரம் இயங்க அனுமதி.

பன்னிரண்டு மணிக்கு மேல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மூன்று நாட்களாக கடைகள் அனைத்தும் பன்னிரண்டு மணிக்கு மேல் மூடப்பட்டிருந்தது. வருகிற திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழுநேரமும் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லஸ், மாட வீதி, மந்தைவெளி போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் இப்போது குறிப்பிடதக்க அளவுக்கு இல்லை. ஆகவே சில கடைகள் தங்களுடைய கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களை வீட்டுக்கே வந்து வழங்குவதாக சுவரொட்டி மூலம் மக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு சிறிய அளவில் வியாபாரம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

Verified by ExactMetrics