இன்று முதல் அரசு நகர்புற பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்.

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின், முதன் முதலாக நான்கு முக்கிய கோப்புகளில் கையழுத்திட்டுள்ளார். அதில் முக்கியமாக அரசு நகர்புற பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்வது. இந்த அறிவிப்பை கொண்டாடும் விதமாக இன்று காலை மந்தைவெளி பகுதியிலுள்ள திமுகவை சேர்ந்த மகளிர் அணியினர் மந்தைவெளி பேருந்து முனையத்தில் பேருந்துகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த அறிவிப்பு தங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளதாக பேருந்தில் பயணம் செய்த மகளிர் தெரிவித்தனர்.

Verified by ExactMetrics