மகளிர் தினத்தையொட்டி பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற மகளிர் கால்பந்து விளையாட்டு

பட்டினப்பாக்கத்தில் மகளிர் தினத்தையொட்டி Slum Soccer என்கிற தனியார் தொண்டு நிறுவனம் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்தினர். இவர்கள் பட்டினப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டை கற்றுக்கொடுத்து வருகின்றனர். மார்ச் 8 ம் தேதி மகளிர் தினத்தன்று இவர்களிடம் கால்பந்து பயின்ற மாணவர்களையும் அவர்களது அம்மாக்களையும் அழைத்து லூப் சாலை அருகே உள்ள பட்டினப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாட்டை விளையாடச் செய்தனர். இது போன்று மகளிரை மகளிர் தினத்தன்று கால்பந்து விளையாட செய்தது ஒரு வித்தியாசமான நிகழ்வாக இருந்தது.

புகைப்படம்: கவிதா பென்னி

Verified by ExactMetrics