மெட்ராஸ் தின விழாவையொட்டி ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்ற தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான வருடாந்திர சென்னை வினாடி வினா போட்டியில் சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளி அணி வெற்றி பெற்றது.
லஸ்ஸில் உள்ள ரானடே நூலகத்தில் நடைபெற்ற இந்த வினாடி வினாவில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மயிலாப்பூர் டைம்ஸ் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது; பல ஆண்டுகளாக ஆகஸ்டு மாதத்தில் இது நடந்து வருகிறது.
எஸ்.பிரவீனா மற்றும் வி.நந்தினி சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளியைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள்
இரண்டாம் பரிசு ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளி; மாணவிகள் V. இளவரசி மற்றும் D. தீபிகா.
மூன்றாம் பரிசை ராஜா முத்தையா பள்ளி, டி.ஆண்ட்ரூ, எம்.முத்துகிருஷ்ணன் ஆகியோர் பெற்றனர். சாந்தோம் பள்ளியின் அணி நான்காவது இடத்தைப் பிடித்தது.
அனைத்து பங்கேற்பாளர்களும் ஆரம்ப சுற்றில் பங்கேற்றதை அடுத்து இந்த நான்கு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. வினாடி வினா போட்டியை ரேவதி ஆர் நடத்தினார்.
வினாக்கள் அனைத்தும் சென்னை சம்பந்தமாகவே கேட்கப்பட்டது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…