ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்ப திருவிழா பணிகள் தொடக்கம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் தெப்ப திருவிழாவிற்க்காக முதற்கட்ட பணிகள் குளத்தில் பேரல்கள் இறக்கி தொடங்கப்பட்டது. இப்போது தெப்பம் விடுவதற்கான மேடைகள் அமைப்பது போன்ற பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது.

கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட தெப்ப திருவிழா ஜனவரி 28 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து கோவில் நிர்வாகத்திடமிருந்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.