மயிலாப்பூரில் கடந்த சில தினங்களில் நடைபெற்ற இரண்டு குற்றச்சம்பவங்கள்

கடந்த சில தினங்களில் மயிலாப்பூரில் இரண்டு குற்றசம்பவ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் வசிக்கும் வயதான வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பழைய நகைக்கு பதில் புதிய நகைகள் கொடுப்பதாக ஒரு நபர் அவரிடம் கூறி அவரை ஒரு வீட்டருகே அழைத்து சென்றுள்ளார். முதலில் அவரிடம் ஒரு மோதிரத்தை வாங்கிக்கொண்டு சென்றவர் பின்பு இன்னொரு மோதிரம் கொடுத்தால்தான் புதிய மோதிரத்தை கொடுப்பர் என்று கூறி இன்னொரு மோதிரத்தையும் வாங்கி சென்றுள்ளார். வெகு நேரமாகியும் நகையை வாங்கி சென்றவர் வரவில்லை. பின்னர் அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்து தனது மகன் மூலம் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மற்றுமொரு சம்பவம், திருமணத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்களை மந்தைவெளி பேருந்து முனையம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே தள்ளி விட்டு அவர்கள் கீழே விழுந்த நேரத்தில் ஒரு பெண்ணின் செயினை பறித்து சென்றுள்ளனர். ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கை பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Verified by ExactMetrics