டி.என்.சி.ஏ லீக் கிரிக்கெட் போட்டிகள் செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.

ஏழு மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 25 முதல் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. திமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகளும் வெவ்வேறு லெவெலில் நடைபெறவுள்ளது. இதன் ஒருபகுதியாக ஜூனியர் டிவிசன் போட்டிகள் அனைத்தும் வரும் கிறிஸ்துமஸ் அன்று முதல் தொடங்கவுள்ளது.

மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆனால் கோவிட்-19 காரணமாக போட்டிகள் நடத்துவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து விளையாட்டு வீரர்களும், போட்டி நடுவரும், கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விதிமுறையை அனைவரும் வரவேற்றுள்ளனர்.

Verified by ExactMetrics