தோட்டக்கலை துறையின் சார்பாக மானிய விலையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச கிட்

தமிழக அரசின் தோட்டக்கலை துறை வீட்டில் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சுமார் இரண்டாயிரம் கிட்களை தயாரித்து வழங்கவுள்ளனர். இதற்க்கான மாதிரி செயல்விளக்கம் இன்று ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்றது.

கிட் 1: ரூ.720. இதில் ஹோஸ், இணைப்பு, பில்டர் ஆகியவை.
கிட் 2: ரூ.2880 இதில் ஹோஸ், இணைப்பு, பில்டர் தவிர டைமர் டிவைசும் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் நாம் வெளியூர் சென்றாலும் நம்முடைய மொபைல் வழியாக ட்ரிப் ஆன் செய்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். இதற்க்கான செயல் விளக்க கையேடும் வழங்குகின்றனர்.

இது கோடைகாலத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சிறந்த முறையாகும். மேற்கண்ட கிட்களுக்கு அரசு மானியமும் வழங்குகின்றனர். இது சம்பந்தமாக மேலும் விவரங்கள் பெற திருவான்மியூரிலுள்ள ராஜீவனை தொடர்புகொள்ளவும் தொலைபேசி எண் : 98402 55347