தேர்தல் 2021: மயிலாப்பூர் பகுதிகளில் பா.ஜ.க தேர்தல் பிரச்சாரம்

மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்று மாலை சுமார் 4 மணியளவில் பா.ஜ.க-வினர் லஸ் பகுதியிலிருந்து மாட வீதி வழியாக மந்தைவெளி மார்க்கெட் வரை தேர்தல் பிரச்சாரம் செய்தனர். நாளை மார்ச் 3ம் தேதி மயிலை மாங்கொல்லையில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சாரமும், பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல ஹாசன் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics