தேர்தல் 2021 : மயிலாப்பூர் தொகுதியில் தி.மு.க சார்பில் T.வேலு போட்டி

இன்று தி.மு.க மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் (மயிலாப்பூர், தி.நகர்)  T.வேலு மயிலாப்பூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுகின்றார். இவர் மந்தைவெளியில் வசித்து வருகிறார். அதே போல் கமல ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நடிகை ஸ்ரீ பிரியா மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இன்று அதிமுக வேட்பாளர் திரு நடராஜ் மயிலாப்பூர் தொகுதி பா.ம.க கட்சியின் நிர்வாகிகளை ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்து தேர்தல் பிரச்சாரம் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். நாம் தமிழர் கட்சியும் மயிலாப்பூர் தொகுதிக்கு ஏற்கனெவே வேட்பாளரை அறிவித்துள்ளது.

Verified by ExactMetrics