தேர்தல் 2021: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மயிலாப்பூரில் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்.

நாம் தமிழர் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக எம். முத்துலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர். இன்று காலை இவர் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கடந்த தேர்தலில் கூட நாம் தமிழர் கட்சி நன்கு படித்த பல பெண் வேட்பாளர்களை களமிறக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மயிலாப்பூர் தொகுதியில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் பெண் வேட்பாளர் இவரே.

 

Verified by ExactMetrics